Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மனைவியைக் கொலை செய்த கணவர் எடுத்த முடிவு

இலங்கையில் மனைவியைக் கொலை செய்த கணவர் எடுத்த முடிவு

5 கார்த்திகை 2023 ஞாயிறு 08:06 | பார்வைகள் : 9369


அளுத்கம, பெனிபெந்திகொட பிரதேசத்தில் தனது மனைவியைக் கொலை செய்த நபர் ஒருவர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (04) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக கணவர் தனது மனைவியை சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்த பின்னர் வீட்டுக்குள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான மனைவி மற்றும் 36 வயதான கணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்