மன்னார் தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நேர்ந்த கதி

5 கார்த்திகை 2023 ஞாயிறு 05:09 | பார்வைகள் : 10272
மன்னார் - ஒழுதுடுவை பகுதியில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்ட விரோதமாக 2.15 கிலோகிராம் தங்கத்தை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட படகு, உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் 28 முதல் 56 வயதுகளுக்கு இடைப்பட்ட வங்காலை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வாகனங்களுடன் 5 சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறையில் உள்ள சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.