இஸ்ரேல் ஹமாஸ் போரை நிறுத்தப்போவது இல்லை! பிரதமர் உறுதி
5 கார்த்திகை 2023 ஞாயிறு 02:53 | பார்வைகள் : 6856
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கிடையேயான போர் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
உலக நாடுள் போரை நிறுத்துமாறு இரு தரப்பினரிடமும் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலிய பிணய கைதிகள் விடுவிக்கப்படும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கடைபிடிக்க போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமக அறிவித்துள்ளார்.
டெல் அவிவ் நகர் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் நடைபெற்ற சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே பிரதமர் நெதன்யாகு இதனை தெரிவித்தார்.
தங்களது படைகள் அனைத்தும் தொடர்ந்து போர் புரிந்து வருவதாகவும் , ஹமாசின் பிடியில் உள்ள பிணய கைதிகளை மீட்கும் வரை இந்த போர் நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பிளின்கன், காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இஸ்ரேல் பிரதமர் தம்மிடம் உறுதி அளித்து இருப்பதாக கூறியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீனர்களுக்கு உதவிகள் செய்யாமல் அவர்களை கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும் பிளிங்கன் குற்றம்சாட்டினார்.


























Bons Plans
Annuaire
Scan