இலங்கையில் நள்ளிரவு முதல் அதிகரிக்கும் உணவுகளின் விலை

4 கார்த்திகை 2023 சனி 15:22 | பார்வைகள் : 6917
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சீனியின் விலை அதிகரிப்பு காரணமாக தேநீரின் விலை 5 ரூபாவினாலும் பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அரிசி, மரக்கறிகள், கோழி இறைச்சி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக சோற்றுப் பொதி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், கொத்து மற்றும் பிரைட் சோற்றுப் பொதி விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025