புயல் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு! - 257,000 வீடுகளுக்கு மின்சாரத்தடை!

4 கார்த்திகை 2023 சனி 15:08 | பார்வைகள் : 8014
சியாரா புயல் காரணமாக பிரான்சில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக பலி எண்ணிக்கை மூன்றாக இருந்த நிலையில், இன்று காலை நான்காவது மரணம் அறிவிக்கப்பட்டது. ஐரோப்பா முழுவதும் 18 பேர் இந்த புயலுக்கு பலியாகியுள்ளனர்.
தற்போது புதிய புயல் ஒன்று பிரான்சை மையம் கொண்டுள்ளது. Domingos என பெயரிடப்பட்ட இந்த புயல் காரணமாக இன்று மாலை முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை வரை 11 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சியாரா புயல் காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சார வழங்கல் இதுவரை பூரணமாக சீரடையவில்லை. இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட தகவல்களின் படி, தற்போது வரை 257,000 வீடுகளுக்கு மின்சாரத்தடை வழங்கப்படவில்லை. திருத்தப்பணிகளில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளதாக மின்சார வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சியாரா புயல் காரணமாக நாடு முழுவதும் 1,400 மரங்கள் தண்டவாளத்தில் விழுந்ததாக SNCF அறிவித்துள்ளது. திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகிறது. சில பகுதிகளில் போக்குவரத்து முற்றாக சீரடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025