இலங்கை நோக்கி படையெடுக்கும் ஐரோப்பிய நாட்டவர்கள்!

4 கார்த்திகை 2023 சனி 12:21 | பார்வைகள் : 8732
சர்வதேச சுற்றுலாப் பயணிகள் 206 பேருடன் போலந்தின் முதல் வாடகை விமானமான Enter Air (ENT -1561) விமானம் நேற்று (03) இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்த விமானம் நேற்றுக் காலை 7.45 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இலங்கை சுற்றுலாத்துறையின் ஏற்பாட்டில் விமான நிலையத்தில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளால் சுற்றுலாப் பயணிகள் வரவேற்கப்பட்டனர். எதிர்வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் இறுதிவரை போலந்திலிருந்து
தொடர்ச்சியாக வாடகை விமானங்கள் இயக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Enter Air என்பது போலந்தின் வாடகை விமான நிறுவனமென்பதுடன் தற்போது போலந்தில் மிகப்பெரிய நிறுவனமாகவும் பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய விமான நிறுவனமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஐரோப்பிய நாட்டவர்கள் இலங்கைக்காக பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.