பாரிஸ் செயிண்ட் ஜேர்மனின் மிரட்டலான வெற்றி

4 கார்த்திகை 2023 சனி 09:36 | பார்வைகள் : 5802
லிகு1 தொடரில் PSG அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
Parc des Princes மைதானத்தில் நடந்த லிகு1 போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி மாண்ட்பெல்லியரை எதிர்கொண்டது.
பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில் PSGயின் லீ காங்-இன் 10வது நிமிடத்திலேயே அபாரமாக கோல் அடித்தார். எம்பாப்வே தன்னிடம் கடத்திய பந்தை லீ கோலாக மாற்றி மிரட்டினார்.
இதனைத் தொடர்ந்து 58வது நிமிடத்தில் வாரென் ஸைர்ரே-எமெரி கோல் அடித்தார். ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் விட்டின்ஹா கோல் அடிக்க அதுவே பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியின் வெற்றி கோலாக மாறியது.
இறுதிவரை மாண்ட்பெல்லியர் அணியால் கோல் அடிக்க முடியாததால் PSG அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 7 வெற்றிகளுடன் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி முதலிடத்திற்கு முன்னேறியது. நைஸ் அணி (6 வெற்றிகள்) இரண்டாவது இடத்திலும், மொனாகோ அணி (6 வெற்றிகள்) அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025