சமூகநலக் கொடுப்பனவுகள்! - 2024 ஆம் ஆண்டில் ஏற்பட உள்ள மாற்றம்!!
4 கார்த்திகை 2023 சனி 11:22 | பார்வைகள் : 12180
சமூகநலக் கொடுப்பனவுகள் (allocations familiales) வரும் 2024 ஆம் ஆண்டில் பெரும் மாற்றங்களைச் சந்திக்க உள்ளது. இந்த கொடுப்பனவுகளை பெறுபவர்களில் பலர் மோசடியில் ஈடுபடுவதாலும், பொய்யான தகவல்களை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டு, அதனை தடுத்து நிறுத்தும் முகமாக பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன.
அதேவேளை, கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவும் உள்ளன. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கொடுப்பனவுகள் அனைத்தும் 4.8% சதவீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளன. வருடாந்த வருமானம் 75,804.98 யூரோக்களுக்கு மிகைப்படாதவர்கள் பெறும் மாதம் 141.99 யூரோக்கள் ஏப்ரல் மாதம் முதல் 148.80 யூரோக்களாக அதிகரிக்க உள்ளது.
முன்று குழந்தைகளைக் கொண்டவர்கள் பெறும் 323.91 யூரோக்கள் பெறுபவர்கள் 339.43 யூரோக்களை பெற்றுக்கொள்வார்கள்.
அதேவேளை, சமூகநலக்கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டு நீண்டகாலமாக வெளிநாடுகளில் வசிப்பவர்கள் குறித்த பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அக்குடும்பங்கள் தொடர்ந்து கொடுப்பனவுகளைப் பெறமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan