Brittany நகருக்கு பயணமாகும் ஜனாதிபதி மக்ரோன்!

3 கார்த்திகை 2023 வெள்ளி 11:21 | பார்வைகள் : 11440
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Brittany நகருக்கு இன்று வெள்ளிக்கிழமை மாலை பயணமாகிறார். அங்கு சியாரா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்திக்கிறார்.
சியாரா புயல் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வடமேற்கு பிரான்சை சூறையாடியிருந்தது. அங்கு புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. 800,000 வரையான வீடுகளுக்கு மின்சார தடை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து இன்று மாலை ஜனாதிபதி மக்ரோன் அங்கு விஜயம் மேற்கொண்டு, மக்களைச் சந்திக்க உள்ளார். எந்த பகுதிக்கு அவர் விஜயம் மேற்கொள்ள உள்ளார் என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை.
புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உதவிகளை விரைந்து மேற்கொள்ள ஜனாதிபதி ஆணையிடுவார் என அறிய முடிகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025