Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் ராணுவம் மீது பதுங்கி இருந்து தாக்குதலை மேற்கொள்ளும் ஹமாஸ் 

 இஸ்ரேல் ராணுவம் மீது பதுங்கி இருந்து தாக்குதலை மேற்கொள்ளும் ஹமாஸ் 

3 கார்த்திகை 2023 வெள்ளி 08:13 | பார்வைகள் : 10346


இஸ்ரேல் ராணுவம் மீது தாக்குதல் நடத்தும் வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையே தாக்குதல் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மொத்தமாக அழிப்பதற்காக காசாவிற்குள் இஸ்ரேல் ராணுவம் தரைப்படைத் தாக்குதலை தொடங்கியுள்ளது.

 ஹமாஸ் அமைப்பினரின் ஆபத்தான சுரங்க பாதை நகரங்கள் குறித்த எச்சரிக்கையுடனே இஸ்ரேலிய படைகள் முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை மீது தாக்குதல் நடத்தும் வீடியோவை  ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில், ஹமாஸ் அமைப்பினர் சுரங்க பாதைகளுக்குள் இருந்து வெளியே தவழ்ந்து வந்து இஸ்ரேலிய துருப்புகளின் மீது யாசின் டேங்க் எதிர்ப்பு கையெறி குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் காட்சிகளை பார்க்க முடிகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்