இந்தோனேசியாவில் இருமல் மருந்தால் பரிதாபமாக பலியாகிய சிறுவர்கள்
3 கார்த்திகை 2023 வெள்ளி 08:03 | பார்வைகள் : 8564
இந்தோனேசியாவில் 200 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இறப்புக்கு காரணமான இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உயர்மட்ட தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய நிறுவனத்தின் தலைவர் உட்பட நால்வருக்கு அபராதமாக சுமார் 51,786 பவுண்டுகள் தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.
Afi Farma என்ற நிறுவனம் தயாரித்துள்ள இருமல் மருந்தில் அளவுக்கு அதிகமான நச்சுப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இருமல் மருந்தால் சுமார் 100 சிறார்கள் கொல்லப்பட்டனர்.
2022 முதல் இந்த நிறுவனத்தின் இருமல் மருந்தால் 200க்கும் அதிகமான இந்தோனேசிய சிறார்கள் மரணமடைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், குறித்த இருமல் மருந்தால் ஐந்து வயதுக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணமடைந்துள்ளதும் தெரியவந்தது. சிறுநீரக சிக்கல் ஏற்பட்டு, குழந்தைகள் மரணமடைந்துள்ளனர்.
காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானிலும் தொடர்புடைய இரும்ல் மருந்தால் குறைந்தது 100 குழந்தைகள் இறந்தனர்.
இதனிடையே, மருந்து தயாரிப்பாளர்கள் மூலப்பொருட்களின் சோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என இந்தோனேசியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் தரப்பு கூறியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிறுவனத்தின் சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
இருப்பினும், பாதுகாப்புத் தரங்களைச் சந்திக்காத மருந்துப் பொருட்களை வேண்டுமென்றே உற்பத்தி செய்ததாக கூறி, அந்த நால்வரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனிடையே, இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்து தொடர்பிலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை முன்வைத்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் காம்பியாவில் 66 சிறார்கள் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan