Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

அவதானம் துருவிய carrots, celery மரக்கறி பொதிகளில் நஞ்சு. Casino

அவதானம் துருவிய carrots, celery மரக்கறி பொதிகளில் நஞ்சு. Casino

3 கார்த்திகை 2023 வெள்ளி 06:07 | பார்வைகள் : 19075


பிரான்ஸ் Casino கடைகளில் விற்கப்படும் துருபிய காரட் (carrots) செலரி (celery)  பொதிகளில் இரசாயன மாறுபாடு காரணமாக நஞ்சு தன்மை கலந்துள்ளது. இதனால் அவை அனைத்தும் திரும்பப் பெறப்படும் என Rappel Conso இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை யாரும் கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும், ஏற்கனவே கொள்வனவு செய்தவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஏற்கனவே வாங்கிய பொதிகள் மீளப் பெறப்பட்டு அதற்கான பணம் திருப்பி தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரசாயன மாறுபாடு ஏற்பட்ட காய்கறிகள். துருவிய carrots 300g Casino முடிவு திகதி 14/11/2023,  துருவிய celery 300g Casino முடிவு திகதி 14/11/2023, macédoine மரக்கறி பொதிகள் 300g Casino முடிவு திகதி  12/11/2023, 1kg துருவிய carrots Casino முடிவு திகதி 14/11/2023. போன்றவை வரும் 19 நவம்பர் வரை திருப்பி பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்