இலங்கையில் பால் மா உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் குறைப்பு
2 கார்த்திகை 2023 வியாழன் 14:33 | பார்வைகள் : 13445
இலங்கையில் பால் மாவின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
இதன்படி, லங்கா சதொசவின் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதன் புதிய விலை 948 ரூபாவாகும்.
இந்த விலை குறைப்பு நேற்று முதல் அமுலுக்கு வருகிறது.
இதேவேளை, சதொசவின் பச்சைப்பயறு மற்றும் கடலை ஆகியவற்றின் விலைகள் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளன.
பச்சைப்பயறு ஒரு கிலோ கிராம் 77 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 998 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.

























Bons Plans
Annuaire
Scan