சியாரா புயல்! - பரிஸ் உள்ளிட்ட 33 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

1 கார்த்திகை 2023 புதன் 16:00 | பார்வைகள் : 10715
சியாரா புயல் காரணமாக நாட்டின் 33 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 170 கி.மீ வேகத்தில் புயல் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Côtes-d'Armor, Finistère மற்றும் Manche ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதிகபட்ச எச்சரிக்கையான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், மழை, வெள்ள அபாயம் உள்ளிட்ட அனர்த்தங்களும் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இல் து பிரான்சுக்குள் பரிஸ், Yvelines, Val-d’Oise ஆகிய மாவட்டங்கள் உட்பட மொத்தமாக 30 மாவட்ங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு முழுவதும் மக்கள் வீட்டுக்குள் இருக்குமாறு உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார். அதேவேளை, 3,200 தீயணைப்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை காரணமாக வீதி போக்குவரத்துக்களில் மாற்றம் செய்யப்பட்டும், விமான சேவைகள், இரவு நேர பேருந்து சேவைகள், மெற்றோக்கள், RER மற்றும் TER சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025