பிக் பாஸ் ஐஷூவின் காதலரா நிரூப்...?
1 கார்த்திகை 2023 புதன் 13:30 | பார்வைகள் : 7326
பிக் பாஸ்7 தமிழ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து இப்போது வரை பார்வையாளர்கள் எதிர்பார்த்தபடியே சண்டையும் சச்சரவும் பல சுவாரஸ்ய கன்டென்ட்டுகளோடும் போய்க் கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாது, கடந்த சில நாட்களாக ஐஷூ-நிக்சன் தான் இந்த சீசனின் பேசு பொருளாக உள்ளனர்.
நிக்சனுக்கு ஐஷூ மீது தனிப்பிரியம் உண்டாகி இருக்கிறது. அவரது கன்னத்தைக் கிள்ளுவது, அழகை வர்ணிப்பது, அத்துமீறி நடக்க முயல்வது என இவர்களின் செயல்கள் பிக் பாஸ் இல்லத்திற்குள்ளேயும் வெளியேயும் பேசு பொருளாகி இருக்கிறது. மேலும் நிக்சனை இந்த சீசனின் அசல் கோளாறு எனவும் பார்வையாளர்கள் சொல்லி வருகின்றனர்.
ஆனால், ஐஷூவுக்கு ஏற்கெனவே வெளியில் ஒரு பாய் ஃபிரெண்ட் இருப்பதாகவும் பிக் பாஸ் இல்லத்திற்குள்ளே தான் நிக்சனுடன் இப்படி நடந்து கொள்வதைப் பார்த்தால் நிச்சயம் வெளியே பிரேக்கப்தான் என கவலையாக அவர் பூர்ணிமாவிடம் பேசி இருக்கிறார். அவர் யார் என பூர்ணிமா கேட்க, ‘என்’ என அவர் கையில் எழுதி காண்பிக்கிறார். உடனே, பூர்ணிமா மைக்கில் உள்ள ’Poornima' என்ற தன் பெயரை ரிவர்ஸில் காட்டி நிரூப்பா என சைகையால் கேட்க ’ஆமாம்’ என்கிறார் ஐஷூ.
மேலும், நிரூப்பும் பிக் பாஸில் ஐஷூ தொடர்பான வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக் செய்து வைத்திருக்கிறார். மேலும், ’ஐஷூ நிரூப்புடன் காதலில் இருக்கும் போதே நிக்சனுடன் இப்படிப் பழகுவது தவறு. அப்படியானால் வெளியே வந்தவுடன் அவரது காதலருடன் பிரேக்கப்பா’ என்ற போஸ்ட்டையும் லைக் செய்துள்ளார் நிரூப். இதனால், ஐஷூ மீது அவர் கோபத்தில் உள்ளார். காதல் பிரேக்கப்தான் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
’இதற்கு முன்பு நிரூப்பும் யாஷிகா, அபிராமி ஆகியோருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்தான். இது கன்டென்ட்டுக்காகதான் ஐஷூ செய்கிறார் என்பதை அவர் புரிந்து கொள்வார்’ எனவும் கூறி வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025


























Bons Plans
Annuaire
Scan