காஸா பகுதியில் இருந்து வெளியேறும் ஐந்து பிரெஞ்சு மனிதாபிமான உதவியாளர்கள்!
1 கார்த்திகை 2023 புதன் 10:44 | பார்வைகள் : 9964
காஸா நிலப்பகுதியில் பணிபுரிந்து வரும் மனிதாபிமான உதவியாளர்கள் ஐவர் அங்கிருந்து வெளியேற உள்ளதாக BFM தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இரட்டைக் குடியுரிமை கொண்ட 450 பேர் காஸாவில் இருந்து வெளியேற அதன் கட்டுப்பாட்டாளர்கள் அனுமதி அளித்துள்ளனர். அவர்களில் குறித்த ஐவரும் இருப்பதாகவும், அவர்கள் பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர்கள் எனவும் அறிய முடிகிறது.
காஸா நிலப்பகுதியில் இருந்து அவர்கள் எகிப்த்துக்கு செல்ல உள்ளதாகவும், அங்கிருந்து நாட்டுக்கு திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஐவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.


























Bons Plans
Annuaire
Scan