காசா மக்கள் எதிர்நோக்கும் மற்றுமொரு பிரச்சனை!
1 கார்த்திகை 2023 புதன் 10:00 | பார்வைகள் : 15774
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலானது முடிவு பெறுமா என்ற எண்ணம் பலர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காசா மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எந்த நோயாளியை காப்பாற்றுவது எந்த நோயாளியை மரணிப்பதற்கு அனுமதிப்பது என்ற தார்மீக நெருக்கடியில் காசா மருத்துவர்கள் சிக்குண்டுள்ளனர்.
மெட்குளோபல் என்ற அமைப்பின் தலைவர் வைத்தியர் சாஹிர் சஹ்லூல் இதனை தெரிவித்துள்ளார்.
காசா மருத்துவமனைகளில் மயக்கமருந்துகளும் வலிநிவாரணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள அவர்,
குருதி வெளியேறும் மற்றும் அதிர்ச்சியில் சிக்குண்டுள்ள நோயாளிகளிற்கு சிகிச்சை வழங்குவதற்கான பல மருந்துகளும் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அப்பால் குண்டுவீச்சு இடம்பெறுகின்றதாகவும், காசாவில் சுத்தமான குடிநீர் எரிபொருள் தட்டுப்பாடுகள் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மருத்துவர் என்ற ரீதியில் எந்த நோயாளியை குறித்து கவனம் செலுத்துவது, உயிர்களை காப்பாற்றுவது எந்த நோயாளியை மரணிக்க விடுவது என தீர்மானிக்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம் எனவும் அவர் வேதனை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


























Bons Plans
Annuaire
Scan