காஸாவில் இரு பிரெஞ்சு சிறுவர்கள் பலி!!

1 கார்த்திகை 2023 புதன் 05:14 | பார்வைகள் : 8865
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், காஸா பகுதியில் இரு பிரெஞ்சு சிறுவர்கள் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று செவ்வாய்க்கிழமை இத்தகவலை வெளியிட்டுள்ளது. பெயர், வயது விபரங்களை வெளியிட மறுத்த அமைச்சகம், இரு சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்தது. அவர்களுடைய தாய் தொடர்பில் தகவல்கள் எதுவும் அறியமுடியவில்லை. அவர் யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, மொத்தமாக கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை தொடர்பில் புதிய தகவல்களும் வெளியிடப்படவில்லை. நான்கு நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட தகவல்களின் படி, காஸாவில் *35 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025