Paristamil Navigation Paristamil advert login

கத்திரிக்காய பக்கோடா

கத்திரிக்காய பக்கோடா

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9128


 

 
தேவையான பொருட்கள்:
 
கத்திரிக்காய் – 2
கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
 
 
செய்முறை:
 
*ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
 
 
*பின்னர் கத்திரிக்காயை நன்கு நீரில் கழுவி, அதனை வட்டமாகவோ அல்லது நீளமாகவோ நறுக்கி நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
 
*பின்பு கத்திரிக்காயை எடுத்து, அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
 
*ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கத்திரிக்காயை மாவில் போட்டு பிரட்டி எண்ணெயில் போட வேண்டும். இதேப் போன்று அனைத்து துண்டுகளையும் பொரித்து எடுத்தால், கத்திரிக்காய் பக்கோடா ரெடி!

வர்த்தக‌ விளம்பரங்கள்