இன்னும் ஐவர் தொடர்பில் தகவல் இல்லை! - பணயக்கைதிகளாக உள்ளனரா..?!

28 கார்த்திகை 2023 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 8880
ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஐவர் தொடர்பில் தகவல்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஐவரும் ஹமாஸ் அமைப்பினரிடம் பணயக்கைதிகளாக உள்ளனரா அல்லது வேறு எங்கேனும் சென்றுள்ளார்களா, இறந்துவிட்டார்களா என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் இல்லை. இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருடன் போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டு, கட்டம் கட்டமாக பணயக்கைதிகளையும், சிறைக்கைதிகளையும் பரிமாறி வருகின்றனர்.
நேற்றைய தினம் 11 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்திருந்தது. அதில் மூன்று பிரெஞ்சு சிறுவர்களும் உள்ளனர். இது தொடர்பாக விரிவான தகவல்களை எமது தளத்தில் பார்வையிடலாம்.
இந்நிலையில், இன்னும் ஐந்து பிரெஞ்சு மக்களைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. “அனைத்து பயணக்கைதிகளையும் விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்வைப்போம்!” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.