இலங்கையில் 40 அரச வைத்தியசாலைகள் மூடப்படும் அபாய நிலையில்
28 கார்த்திகை 2023 செவ்வாய் 02:39 | பார்வைகள் : 6401
மூடப்படும் நிலையில் உள்ள வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது,
இலங்கை முழுவதும் தற்போது 40 அரச வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 100 அரச வைத்தியசாலைகள் மூடப்படுவதை நோக்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலைகளை சூழவுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆராய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் GMOA உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கினார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan