X சமூகவலைத்தளத்தில் இருந்து வெளியேறினார் - பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ!!

27 கார்த்திகை 2023 திங்கள் 12:56 | பார்வைகள் : 9366
X (பெயர் மாற்றம் செய்யப்பட்ட Twitter) சமூகவலைத்தளத்தில் இருந்து பரிஸ் நகரபிதா ஆல் இதால்கோ வெளியேறியுள்ளார். கிட்டத்தட்ட 14 வருடங்களில் பின்னர் அவர் அதில் இருந்து வெளியேறியுள்ளார்.
”நான் X தளத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளேன். முன்னர் அது புரட்சிகரமான கருவியாக இருந்தது. முன்னர் ஜனநாயகம் காத்தது. அதிக நாடுகளுக்கு தகவல் கொண்டு சேர்த்தது. “ என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆன் இதால்கோ கடந்த 2009 ஆம் ஆண்டு x தளத்தில் இணைந்திருந்தார்.
முன்னர் Twitter என அழைக்கப்பட்ட குறித்த சமூகவலைத்தளம் சென்றவருட ஒக்டோபரில் Elon Musk இனால் வாங்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் பல கட்டுப்பாடுகள் அதில் கொண்டுவரப்பட்டது.
உலகம் முழுவதிலும் உள்ள பல பிரபலங்கள் குறித்த சமூகவலைத்தளத்தி விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025