கனடாவில் கோர விபத்து... 5 பேர் பலி
27 கார்த்திகை 2023 திங்கள் 07:01 | பார்வைகள் : 12304
கனடாவின் ரொறன்ரோவில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நான்கு பதின்ம வயது உடையவர்களும் ஒரு பெண்ணும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
ஹிடன்வெளி பகுதியின் 60-ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
15 முதல் 17 வயது மதிக்கத்தக்க இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் நோர்த் யோர்க் மற்றும் ரிச்மண்டில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தில் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.
இந்த விபத்து காரணமாக அறுபதாம் இலக்க அதிவேக நெடுஞ்சாலை சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கத.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் கூறியுள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan