Paristamil Navigation Paristamil advert login

வல்வெட்டித்துறையில் முதல் மாவீரருக்கு அஞ்சலி

வல்வெட்டித்துறையில் முதல் மாவீரருக்கு அஞ்சலி

27 கார்த்திகை 2023 திங்கள் 06:40 | பார்வைகள் : 6948


தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் என அழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதனுக்கு ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


வல்வெட்டித்துறையிலுள்ள சங்கரின் பூர்வீக  இல்லத்துக்கு முன்பாக ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்