ஆகாயத்தில் உயர பறந்து கோல்! ஒட்டுமொத்த மைதானத்தையும் அமைதியாக்கிய ரொனால்டோ
 
                    26 கார்த்திகை 2023 ஞாயிறு 09:48 | பார்வைகள் : 8338
அல் அக்ஹடௌட் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோவின் அல் நஸர் அணி 3-0 என்ற கணக்கில் மிரட்டல் வெற்றி பெற்றது.
சவுதி புரோ லீக் தொடரின் நேற்றைய போட்டியில் அல் நஸர் (Al-Nassr) மற்றும் அல் அக்ஹடௌட் (Al Akhdoud) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் அல் நஸரின் சுல்தான் (Sultan) பாஸ் செய்த பந்தை சமி அல்-நஜெய்(Sami Al-Najei) அபாரமாக கோலாக மாற்றினார்.
இதன்மூலம் அல் நஸர் அணி முதல் பாதியில் 1-0 என முன்னிலை வகித்தது.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் ரொனால்டோ விஸ்வரூமெடுத்தார். 77வது நிமிடத்தில் மேலே இருந்து பறந்துவந்த பந்தை அவர் லாவகமாக காலில் வாங்கி, ஒரே கிக்கில் கோல் அடித்தார்.
அதன் பின்னர் 80வது நிமிடத்தில் அவர் அடித்த கோல் தான் ஒட்டுமொத்த மைதானத்தையும் உறைய வைத்தது. கோல் போஸ்டுக்கு தொலைவில் இருந்து ரொனால்டோ ஒரு கிக் விட, அது ஆகாயத்தில் உயர பறந்து வலைக்குள் விழுந்து கோலானது. இதனால் எதிரணி வீரர்கள் ஸ்தம்பித்து போயினர்.
இறுதியில் அல் நஸர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. போட்டிக்கு பிறகு ரொனால்டோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ''Happy Weekend Everyone!'' என பதிவிட்டார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.
        காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan