பரிசில் - யூத எதிர்ப்பு தாக்குதல்களில் ஈடுபட்ட 13 பேர் கைது!
26 கார்த்திகை 2023 ஞாயிறு 08:41 | பார்வைகள் : 8342
யூத மதத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்ட பதின்மூன்று பேர்களை பரிஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள பாடசாலை சுற்று மதில்களில் மற்றும் பொது இடங்களில் ’சுவாஸ்திகா’ இலட்சணைகளை ( நாசிப்படையினரின் இலட்சணை) வரைந்து யூத எதிர்ப்பினைத் தெரிவித்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். பரிசின் பல்வேறு இடங்களில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர்களில் ஏழு பேர் தீவிர வலதுசாரியினர் என அறிய முடிகிறது. அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு நான்கு மாதங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan