பள்ளிவாசல் ஒன்றில் உயிரச்சுறுத்தல்!!
 
                    25 கார்த்திகை 2023 சனி 17:55 | பார்வைகள் : 17322
செபூர் (Cherbourg) நகரின் சிறு நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் உயிரச்சுறுத்தல் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இன்று காலை Cherbourg-en-Cotentin (Manche) இலுள்ள பள்ளிவாசலில் பல வாசகங்கள் எழுதியிருந்தமையை அடுத்து அவர்கள் காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த வாசகங்களில் உயிரச்சுறுத்தல் விடுக்கும் வாசகங்களும் இருந்துள்ளன.
அதில், அண்மையில் இரவுக் கேளிக்கை விருந்தில் உள்நுழைந்தவர்களால் கத்திக்குத்திற்கு இலக்காகி சாவடைந்த 16 வயதுடைய தொமாவிற்கு நீதி கோரி «தொமாவிற்கு நீதி வேண்டும் - இங்கு நாங்கள் வாழ்வது பிரான்ஸ் - அராப்களைக் கொல்வோம்» என்ற வாசகங்களும் சிவப்பு பொறிக்கப்பட்டிருந்தன.

எப்படி நஹேலின் சாவிற்கு சுவர்கள் எங்கும் காவற்துறையினரை அச்சுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்டனவோ அதே போல் இந்தப் பள்ளிவாசலில் தொமதாவிற்கு நீதிகோரும் வாசகங்கள் இருந்துள்ளன.
இதனைத் தீவிரமாகக் காவற்துறையினர் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
 
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.
        காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.         
     


 
        
        .jpeg) 
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan