அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்
25 கார்த்திகை 2023 சனி 15:33 | பார்வைகள் : 7190
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
நாணய மாற்று வீத நகர்வுகளின் அடிப்படையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜப்பானிய யென்னுக்கு நிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 24.6 சதவீதத்தால் அதிகரித்தது.
குறித்த காலப்பகுதியில் ஸ்ரேலிங் பவுண்ட்ஸுக்கு நிகராக 6.2 சதவீதமும், யூரோவுக்கு நிகராக 8 சதவீதமும், இந்திய ரூபாவுக்கு நிகராக 11.2 சதவீதமும் இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan