பரிசில் காணாம போன சிறுமி - பாதசாரி ஒருவரால் மீட்பு!!
25 கார்த்திகை 2023 சனி 15:02 | பார்வைகள் : 18763
பரிசில் வசிக்கும் 11 வயதுடைய Hanna எனும் சிறுமி காணாமல் போனதை அடுத்து, காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், பாதசாரி ஒருவரால் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார்.
12 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் குறித்த சிறுமி நேற்று வெள்ளிக்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியேறியிருந்தார். அவர் வீட்டை விட்டு வெளியேறுவதாக கடிதம் ஒன்று எழுதி வைத்துவிட்டுச் சென்றதாக அவரது பெற்றோர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
பின்னர் சிறுமி காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படம் பகிரப்பட்டு தகவல் பரப்பப்பட்டது. சிறுமியிடம் தொலைபேசி எதுவும் இல்லை எனவும், பணமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த சிறுமி இன்று சனிக்கிழமை காலை Le Triomphe café அருந்தகத்தின் அருகே வைத்து பாதசாரி ஒருவரால் அடையாளம் காணப்பட்டார். அவர் காவல்துறையினரை அழைக்க, சிறுமி மீட்கப்பட்டார்.
ஆறாம் வகுப்பு பயிலும் குறித்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறியது ஏன் என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan