ஸ்தானில் பெரும் தீ விபத்து!! தீக்காயங்கள்!!

25 கார்த்திகை 2023 சனி 14:17 | பார்வைகள் : 5498
இன்று அதிகாலை 1h55 அளவில் ஸ்தானில் (Stains) இலுள்ள 4 place du colonel Fabien இருக்கும் நான்குமாடி குடியிருப்புக் கட்டடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மிகக்குறைந்த நேரத்திற்குள் வந்த தீயணைப்புப் படையினர் கடுமையான தீக்காயங்களிற்கு உள்ளான பெண்ணொருவரை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்தப் பெண்ணின் ஆறுவயதுச் சிறுவனும் தீக்காயங்களிற்க உள்ளானதுடன் புகையைச் சுவாசித்ததால் மாரடைப்பிற்கு உள்ளாகி உள்ளான். அதிஸ்டவசமாக தீயணைப்புப் படையினரின் முதலுதவியால் உயிர் தப்பி உள்ளார். உடனடியாக அவரும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மாநகரசபையால் இடிக்கப்படுவதற்காக ஆணையிடப்பட்ட இந்தக் கட்டத்தில் சில குடும்பங்கள் மட்டுமே இருந்த நிலையிலேயே இந்தத் தீவிபத்து நடந்துள்ளது