ஐபிஎல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் - சி.எஸ்.கே அறிவிப்பு
25 கார்த்திகை 2023 சனி 08:30 | பார்வைகள் : 7244
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாடிய பென் ஸ்டோக்ஸ் பின்னர் காயம் காரணமாக கடந்த முழு ஐபிஎல் தொடரில் இருந்தும் வெளியேறி இருந்தார்.
இதனை தொடர்ந்து, கடந்த ஜூலையிலேயே சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வை அறிவித்து இருந்தார்.
ஆனால் பின்னர் உலக கோப்பை கருத்தில் கொண்டு தன்னுடைய ஓய்வு அறிவிப்பை பென் ஸ்டோக்ஸ் திரும்ப பெற்றுக் கொண்டார்.
இதற்கிடையில் அவரது காயம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள அவரது விளையாட்டு திறன் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிஎஸ்கே நிர்வாகம் அவரை விடுவிக்க முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல் தொடரில் விளையாட மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
2024ம் ஆண்டில் இந்தியாவுடன் நடக்க இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் டி20 உலக கோப்பை போட்டிகளை கருத்தில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan