Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் போட்டிகளின் போது பாதுகாப்புக்கு 15,000 இராணுவ வீரர்கள்!!

ஒலிம்பிக் போட்டிகளின் போது பாதுகாப்புக்கு 15,000 இராணுவ வீரர்கள்!!

24 கார்த்திகை 2023 வெள்ளி 13:31 | பார்வைகள் : 7919


ஒலிம்பிக் போட்டிகளின் 15,000 இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் இல் து பிரான்ஸ் மாகாணத்தில் மட்டும் 10,000 இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் எனவும், ஏனையவர்கள் முக்கிய நகரங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்றவற்றில் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இராணுவத்துக்கான ஆளுனர் Christophe Abad, இன்று வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்தார். 

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 250 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில், பாதுகாப்பு தொடர்பான சகல நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்படுவதாக அறிய முடிகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்