கனடாவில் அரசாங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
24 கார்த்திகை 2023 வெள்ளி 13:01 | பார்வைகள் : 8864
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அரசாங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சம்பள உயர்வை முன்னிட்டே இவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
கல்வி மற்றும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் நேற்றைய தினமும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சில தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்சங்கங்கள் இன்று அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன.
அரசாங்கம், 10.3 வீத சம்பள அதிகரிப்பினை ஐந்து ஆண்டுகளில் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது.
மேலும் அனைத்து உழியர்களுக்கும் ஒரு தடவை ஆயிரம் டொலர்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இந்த முன்மொழிவுகளை தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளன.


























Bons Plans
Annuaire
Scan