சந்தேகநபரை கைது செய்ய ஜா-எல ஆற்றில் குதித்த பொலிஸ் அதிகாரியின் நிலை
24 கார்த்திகை 2023 வெள்ளி 12:38 | பார்வைகள் : 7591
ஜா-எல ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய முயன்ற போது காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைத் உறுதி செய்துள்ளது.
நீர்கொழும்பு கால்வாய்க்கு அருகில் பமுனுகம சேதவத்த பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று ( 23) ஜா-எல பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாருக்குப் பின்னால் ஓடிவந்து கால்வாயில் குதித்து தப்பிக்க முயற்சித்த நிலையில் அவரைக் கைதுசெய்ய பொலிஸ் கான்ஸ்டபிள் ஆற்றில் குதித்து அடித்துச் செல்லப்பட்டார்.
ஜா-எல பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்ல தயாராகும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan