Paristamil Navigation Paristamil advert login

Crépol படுகொலை! - ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!!

Crépol படுகொலை! - ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!!

23 கார்த்திகை 2023 வியாழன் 10:44 | பார்வைகள் : 17873


Crépol கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இத்தாக்குதலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை நகர முதல்வர்களுடனான சந்திப்பு ஒன்றில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொண்டார். அதன்போதே இதனைக் குறிப்பிட்டார். Crépol (Drôme) கிராமத்துக்குள் நுழைந்த இளைஞர்கள் சிலர், அங்கு இடம்பெற்ற திருவிழா ஒன்றில் இருந்த பலரைத்தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் 16 வயதுடைய தோமஸ் எனும் சிறுவன் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டார். அத்தோடு இத்தாக்குதலை பயங்கரமான படுகொலை «terrible assassinat» எனவும் குறிப்பிட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்