காசா மீதான இஸ்ரேல் போர் - அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம் ஈடுப்படும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்

23 கார்த்திகை 2023 வியாழன் 10:19 | பார்வைகள் : 9454
இஸ்ரேல் காசா மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டு வருவதை எதிர்த்து பல வல்லரசு நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது
இந்நிலையில் காசாவில் யுத்த நிறுத்தத்தை கோரி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சுதந்திரமான பாலஸ்தீனம் கடலில் இருந்து ஆற்றிற்கு பாலஸ்தீனியர்கள் சுதந்திரமடைவார்கள் போன்ற கோசங்களை எழுப்பியவாறு அவுஸ்திரேலியாவின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காசாவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காசாவிலும் மேற்குகரையிலுமிருந்து இஸ்ரேலிய படையினரை வெளியேற்றவேண்டும் இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தை அவுஸ்திரேலியா நிறுத்தவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது.
உணர்வுபூர்வமான உரைகளும் இடம்பெற்றுள்ளன.