‘கங்குவா’ படப்பிடிப்பில் விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய சூர்யா!

23 கார்த்திகை 2023 வியாழன் 09:04 | பார்வைகள் : 8837
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் படப்பிடிப்பின் போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் சூர்யா நூலிழையில் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது படப்பிடிப்பின் போது ரோப் கேமரா திடீரென விழுந்து ஏற்பட்ட விபத்தில் சூர்யா நூலிழையில் உயிர் தப்பியதாகவும் அவருக்கு தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து இன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சூர்யாவுக்கு வேறு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் நலமாக இருப்பதாகவும் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தகவல் தெரிவித்துள்ளார். ’கங்குவா’ படப்பிடிப்பில் விபத்து நடந்ததாக வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் சூர்யாவுக்கு லேசான காயம் தான் என்ற தகவல் அவர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில், 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025