யூத பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த - மகிழுந்து சாரதி கைது!!
23 கார்த்திகை 2023 வியாழன் 06:03 | பார்வைகள் : 8476
யூத குடும்பம் ஒன்றுக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் விடுத்த மகிழுந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் தலைநகர் Tel Aviv இல் இருந்து Orly விமான நிலையமூடாக வருகை தந்த யூத குடும்பத்தினரை, வாடகை மகிழுந்து சாரதி ஒருவர் மிரட்டியுள்ளார். முதலில் “நான் உன்னை அழைத்துச் செல்ல மாட்டேன், அழுக்கு யூதரே" என குறித்த சாரதி தெரிவித்துள்ளார். பின்னர் அரபு மொழியில் “நான் உன்னையும் உன் மனைவியையும் உன் குழந்தைகளையும் கொன்றுவிடுவேன்” எனவும் மிரட்டியுள்ளார்.
இச்சம்பவத்தினால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்கள்.
ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து, குறித்த குடும்பத்தினர் காவல்துறையினரிடம் வழக்கு தொடுத்துள்ளனர்.
அதையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் கடந்த வாரத்தில் குறித்த சாரதியை அடையாளம் கண்டு, கைது செய்துள்ளனர்.
பிரான்சின் யூத மதத்தினர் மீது துவேசம் காட்டுவது அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவை
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan