விஜய்க்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்கள்..!
23 கார்த்திகை 2023 வியாழன் 05:46 | பார்வைகள் : 5991
தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘பீஸ்ட்’. கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் எதிர்பார்த்த வசூல் கிடைத்ததாக கூறப்பட்டது. இருப்பினும் நெல்சன் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிப்பாரா என்ற கேள்வி திரை உலகை வட்டாரங்களில் இருந்தது.
இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 68’ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அட்லி ஆகிய இருவரும் விஜய்க்காக காத்திருக்கும் நிலையில் ’ஜெயிலர்’ மாபெரும் வெற்றி காரணமாக மீண்டும் நெல்சன் உடன் விஜய் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் ‘பீஸ்ட்’ கூட்டணி இணையுமா? ’ஜெயிலர்’ போன்று ஒரு சூப்பர் ஹிட் படத்தை விஜய்க்கும் நெல்சன் கொடுப்பாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இப்போதைக்கு ’தளபதி 68’ படத்தில் கவனம் செலுத்தி வரும் விஜய், ’தளபதி 69’ படம் குறித்த முடிவை இன்னும் ஒரு சில மாதங்களில் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan