அமெரிக்காவில் இந்திய தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: பஞ்சாப், ஹரியானாவில் என்ஐஏ சோதனை.

23 கார்த்திகை 2023 வியாழன் 11:30 | பார்வைகள் : 6150
அமெரிக்காவில் இந்திய தூதரக அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் கடந்த மார்ச் 19 மற்றும் ஜூலை2 ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்தவும், தூதரக அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அலுவலகம் மீது தீவைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் 14 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பஞ்சாபின் மோகா, ஜலந்தர், லூதியானா, குருதாஸ்பூர், மொகாலி மற்றும் பாட்டியாலாவிலும், ஹரியானாவின் குருஷேத்திரா மற்றும் யமுனா நகரிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.