பிரான்சின் Bassin d'Arcachon பகுதியில் பிடிக்கப்படும் மட்டிகள், சிற்பிகள், மீன்களுக்கு தடை. Préfet de la Nouvelle- Aquitaine et de la Gironde.
22 கார்த்திகை 2023 புதன் 10:23 | பார்வைகள் : 15697
ஆண்டொன்றுக்கு 8 000 தொன் சிற்பிகள், மட்டிகளையும், அதற்கும் அதிகமான மீன்வகைகளையும் விற்பனைக்கு அனுப்பும் GIRONDE பகுதிக்கே குறித்த தடையை Préfet de la Nouvelle- Aquitaine et de la Gironde.விடுத்திருக்கிறது. இந்ததடை நவம்பர் 14 திகதிமுதல் தடைமுறைக்கு வந்துள்ளது. இது ஒரு தற்காலிகமான தடையுத்தரவு என 'Préfet'காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்தப்பகுதி கடலில் பிடிக்கப்படும் மீன்களுக்கு மட்டுமன்றி, பொழுது போக்கிற்காக தனிமனிதர்களால் தூண்டில் மூலம் பிடிக்கப்படும் மீன்களும் உண்ணவோ,விற்பனை செய்யவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த கடலில் 'Escherichia coli' எனும் பாக்டீரியா அதிகமாக கடல் நீரில் கலந்து நீரை மாசுபடுத்தியுள்ளது. இங்கு பிடிக்கப்டும் கடலுணவை உண்பதால் மனித உயிர்களுக்கு பாரிய விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு வாரத்துக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ள தடை,கடல் வள சுகாதார அமைப்பு மேற்கொண்டுவரும் ஆய்வின் முடிவுகளின் பின்னரே நீடிப்பதா, இல்லை தளர்த்துவதா என முடிவுசெய்யப்படும் எனவும் அறியமுடிகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan