குட் நைட் இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?

22 கார்த்திகை 2023 புதன் 05:50 | பார்வைகள் : 4322
நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
மேலும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில், குட் நைட் திரைப்படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக் நடிப்பில் உருவான குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.---