குழு மோதலில் சிறுவன் பலி! - ஒன்பது பேர் கைது!!
22 கார்த்திகை 2023 புதன் 07:00 | பார்வைகள் : 20219
தெற்கு பிரான்சில் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் 16 வயதுடைய தோமஸ் (Thomas) எனும் சிறுவன் கொல்லப்பட்டிருந்தான். இரு குழுக்களாக பிரிந்து மோதலில் ஈடுபடும் போது கத்திக்குத்துக்கு இலக்காகி அவன் பலியானான்.
இச்சம்பவம் சனிக்கிழமை இரவு Drôme மாவட்டத்தில் உள்ள Crépol எனும் சிறிய கிராமம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. 16 தொடக்கம் 20 வயதுக்குட்ட சிலர் குழு மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதன் முடிவில் குறித்த 16 வயதுச் சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றது. இந்த தாக்குதலில் தோமஸ் உயிரிழந்தான்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், Romans-sur-Isère area (Drôme) நகரில் வசிக்கும் ஏழு பேர்களை கைது செய்தனர். மேலும் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியது 20 வயதுடைய ஒருவன் என தெரிவந்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan