Paristamil Navigation Paristamil advert login

குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் மஹிந்த

குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் மஹிந்த

21 கார்த்திகை 2023 செவ்வாய் 11:54 | பார்வைகள் : 7146


தம் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாம் தனிப்பட்ட இலக்குகளிலிருந்து பார்க்க வேண்டும்.

இல்லையெனில், சிறந்த வரவு செலவுத் திட்டங்கள் கைவிடப்படும். எது சரியோ அதைச் சரியென்றும், தவறைத் தவறென்றும் காட்ட வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை நம்பிக்கையுடன் முன்னோக்கி கொண்டு செல்லுங்கள். நாங்கள் எப்போதும் மக்கள் கருத்தில்தான் இருக்கிறோம். மக்கள் பிரச்சனையில் சிக்காத வகையில் மக்களுக்காகச் செயல்படும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு நாங்கள் முழு ஆதரவையும் வழங்குகிறோம். நாட்டின் பொருளாதாரம் மக்களுடன் உயர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்கான பின்னணியை அமைக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் ஆதரவளிப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்