தென் அமெரிக்காவில் சுரங்கம் இடிந்து விழுந்து 10 பேர் பலி

21 கார்த்திகை 2023 செவ்வாய் 09:26 | பார்வைகள் : 9191
தென் அமெரிக்க நாடான சுரினாமில் தங்கச் சுரங்கமானது இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் அமெரிக்காவில் சட்டவிரமாக தோண்டப்பட்ட தங்க சுரங்கமானது இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையினர், ராணுவ அதிகாரிகள், மீட்புப்படை குழுவினர் சம்பவ இடத்திற்கு மீட்டெடுக்க முயன்றுள்ளனர்.
இந்த சுரங்கம் சுரினேமின் தெற்கு மாகாணத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் அமைந்துள்ளது.
சுரங்கம் இடிந்து விழுந்தது தொடர்பில் இது வரையில் ஒரு காரணமும் வெளியாகவில்லை.
சுரினேம் நாட்டில் தங்க சுரங்கம் அமைக்க அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன.
கடந்த சில வருடங்களாக சுரங்கம் தோண்டும் பணி அதிகரித்துள்ளது.
மேலும் இது குறித்து அந்நாட்டின் அதிபர் தெரிவிக்கையில்,
"சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது முக்கியமானது" என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1