100 வயதை கடந்த இரட்டை சகோதரிகள்... நீண்ட நாள் வாழ இதுவே காரணம் என நெகிழ்வு
21 கார்த்திகை 2023 செவ்வாய் 09:17 | பார்வைகள் : 5004
இங்கிலாந்தில் உள்ள இரட்டை சகோதரிகள் தங்களுடைய 100 - வது பிறந்தநாளை கொண்டாடியது தற்போது வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயர் நகரத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஆனி பிரௌன் மற்றும் புளோரன்ஸ் பாய்காட். இவர்கள் இருவரும் தங்களுடைய 100 -வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
இவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் தி ஃபிர்ஸ் குடியிருப்பு இல்லத்தில் நடைபெற்றது.
5 தலைமுறைகள் கூடி, குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பேசிய ஆனி பிரௌன், "எங்களிடம் இருக்கும் வித்தியாசத்தை எங்களின் தந்தையால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
நாங்கள் எப்போதும் ஒன்றாகவே தான் இருப்போம். ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இருந்தது இல்லை.
எங்களுக்கு 50 வயதில் எப்படி இருந்ததோ, அந்த மாதிரி தான் இப்பவும் உணர்கிறேன்.
நீங்கள் ஆரம்பிக்கும் செயலை தொடர்ந்து செய்யுங்கள். இரவில் சீக்கிரம் உறங்குவதற்கு சென்றுவிடுங்கள்.
இதுவே நீண்ட ஆயுளுக்கான ரகசியம்" என்றார்.
மேலும், புளோரன்ஸ் பாய்காட் மகள் கேத்தி லிண்ட்சே பேசுகையில், "எங்களது குடும்பத்தில் இவர்கள் தான் இரட்டையர்கள்.
இவர்கள் இளமையில் இருக்கும் போது ஒரே போல் இருந்தனர். குரலை வைத்து தான் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியும்" என்றார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan