விமான நிலையங்களில் தடைப்பட்ட இயந்திரம் - காத்திருந்த பயணிகள்!
20 கார்த்திகை 2023 திங்கள் 16:52 | பார்வைகள் : 16943
சாள்-து-கோல் உள்ளிட்ட பல விமான நிலையங்களில் எல்லைப்பாதுகாப்பை உறுதி செய்யும் கருவிகள் இயங்க மறுத்ததால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள dispositif Parafe கருவிகள் இன்று காலை முதல் செயலிழந்தது. 'பயணிகளின் எல்லை பாதுகாப்பை உறுதி செய்யும் இணையவழி கருவிகளான இவை, இயங்க மறுத்ததால் பயணச்சிட்டைகள், அடையாள அட்டைகள், கடவுச்சிட்டைகள் போன்றவற்றை உறுதி செய்ய முடியாமல் போனது. இதனால் விமான நிலைய அதிகாரிகள் 'கைமுறையாக' பொறுமையாக அவற்றை சோதனையிட நேர்ந்தது. இதனால் பயணிகள் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
கிட்டத்தட்ட நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்த குழப்பங்கள் ஏற்பட்டன. காலை 11 மணிக்கு ஆரம்பமான இந்த குழப்ப நிலை, மாலை 4 மணி அளவில் சீரடைந்தது.
அதேவேளை, இன்று விமான கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை அடுத்து, 25% சதவீதமான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan