Paristamil Navigation Paristamil advert login

இன்று இரவு ஒளிர இருக்கும் சோம்ப்ஸ் எலிசே!!

இன்று இரவு ஒளிர இருக்கும் சோம்ப்ஸ் எலிசே!!

20 கார்த்திகை 2023 திங்கள் 08:46 | பார்வைகள் : 10038


நத்தார், புதுவருடக் கொண்டாட்டங்களிறகாக மின்விளக்கு அலங்காரங்கள் பிரான்ஸ் முழுவதும் செய்வது வழமை. அதிலும் உலகின் அழகிய சாலைகளில் முதன்மையானதான அவெனியூ சோம்ஸ் எலிசேயின் மின்விளக்கு அலங்காரம் மிகவும் அழகானது.

இந்த அவெனியூ சோம்ஸ் எலிசேயின் நத்தார் மற்றும் புதுவருடத்திற்கான மின்விளக்கு அலங்காரம் இன்றிரவு முதல் ஒளிர உள்ளது.

இந்த வருடம் பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான ஜில் லுலூச் (Gilles Lellouche) அவர்களால் ஒளிரவைக்கப் பட உள்ளது. 

அத்துடன் நோய்வாய்ப்பட்ட அவர்களின் கனவை நனவாக்கும் பொதுநலத் தொண்டு நிறுவனமான Petits Princes  இன் மூன்று குழந்தைகளும், பரிசின் நகரபிதா அன் இதால்கோ அவர்களும் ஜில் லுலூச்சுடன் இணைந்து இன்று இரவு இந்த மின்விளக்குகளை ஒளிர வைக்க உள்ளார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்