Torcy : சமூகநலக் குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் கத்திக்குத்தில் பலி!!
20 கார்த்திகை 2023 திங்கள் 06:56 | பார்வைகள் : 20766
அரசால் வழங்கப்படும் சமூகநல குடியிருப்பு (résidence sociale) வீட்டில் வசிக்கும் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்.
Torcy (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள சமூகநல குடியிருப்பு வீடொன்றில் வசிக்கும் 28 வயதுடைய ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலாளி சம்பவ சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவர் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. தாக்குதலுக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan