வீடற்ற, குழந்தை பெற்ற தாயையும், சேயையும் எங்கே தங்கவைப்பது? பிரான்ஸ் மருத்துவமனைகள்.
20 கார்த்திகை 2023 திங்கள் 06:44 | பார்வைகள் : 9651
ஒரு தாய் மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பின்னர் அங்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை தங்கியிருக்க அனுமதி உண்டு. வேறு மருத்துவ காரணங்களுக்காக சில தாயும், சேயும் சில காலங்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருப்பதும் உண்டு.
ஆனால் வீடற்ற தாய்மார்கள் குழந்தை பிறந்த பின்னர் எங்கே போவது எனும் நிலை தெரியாமல் தவித்து வருகின்றனர். Saint Denis உள்ள Delafontaine மருத்துவமனையின் தாதியர்கள் இந்த நிலைகுறித்து ஒரு உருக்கமான கடிதம் ஒன்றினை அரச சுகாதார அதிகாரிகளுக்கு எழுதியுள்ளனர்.
பிரான்சில் அண்மைக் காலமாக பரவலாக மருத்துவமனைகளின் மகப்பேறு பகுதிகள், மருத்துவர்கள்,தாதியர்கள், பற்றாக்குறையால் மூடப்பட்டு வருகிறது இதனால் குறித்த சில மருத்துவமனைகளுக்கு அதிகப்படியான தாய்மார் மகப்பேறுக்காக வருகிறார்கள். அவர்களுக்கான இடங்களை ஒதுக்குவதே சிரமமாக இருக்கும் நிலையில், குழந்தை பெற்ற பின்னர் வீடில்லாத தாயையும் சேயையும் மருத்துவமனையில் தங்கவைக்க முடியாததால் நாங்கள் கட்டாயமாக அவர்களை வெளியேற்றுகிறோம், இதில் சில தாய்மார்கள் மருத்துவ மனையின் நடைபாதைகளில் தங்கியிருக்கிறார்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னர் மருத்துவமனைகளின் அருகே தற்காலிக அவசர தங்குமிடங்கள் (hébergement d'urgence) இருந்தது அவைகளும் படிப்படியாக மூடப்படுகிறது. உதாரணமாக Seine-Saint-Denis பகுதியில் 3000 தங்குமிடங்கள் முன்னர் இருந்தன இப்போது படிப்படியாக குறைக்கப்பட்டு 2000 தங்கிமிடங்களே உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan